3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

0
tasmac

நிவர் புயலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் செங்கல்பட்டு உட்பட 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இன்று அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகள்:

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக வலுவடைந்து இன்று பிற்பகல் அதிதீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட 7 மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இன்று பொது விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு மின்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறை பணியாளர்கள் மட்டும் தயார் நிலையில் பணியில் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புயல் மணிக்கு 11 கிமீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் தயாராக உள்ளனர். மேலும் தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு இந்திய ராணுவமும் உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்பு அதிகமிருக்கும் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூடவும், கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மாலை 5 மணிக்கும், பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்பட்ட மதுபான கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here