இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தேதி அறிவிப்பு – பயணிகள் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு!!

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 தேதி அறிவிப்பு:

பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக, வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு 16,768 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்கு 16,209 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. திரும்பி வருவதற்கு ஏதுவாக ஜனவரி 16ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை இந்த பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 1800 425 6151  இந்த எண்ணில் புகார் செய்யலாம் எனவும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், உள்ளிட்ட ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here