IND W vs PAK W: உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா…, பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்!!

0
IND W vs PAK W: உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..., பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்!!
IND W vs PAK W: உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..., பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

IND vs PAK:

தென் ஆப்பிரிக்காவில் ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பையின் 8வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் B யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி நேற்று, உலக கோப்பையில் தனது முதல் போட்டியாக, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை காயம் காரணமாக இதில் களமிறங்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து தொடங்கப்பட்ட இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் விளைவால், பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஜவேரியா கான் (8), முனீபா அலி (12) ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, 7 ஓவர் முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இவர்களுக்கு பிறகு, களமிறங்கிய கேப்டன் பிஸ்மா மரூஃப் அதிரடியாக விளையாடி 68* ரன்கள் எடுத்திருந்தார்.

“திறமைக்காக ஒரு வாய்ப்பு தரலாமே”…, கே எல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கவாஸ்கர்!!

இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், யாஸ்திகா பாட்டியா (17), ஷஃபாலி வர்மா (33), ஹர்மன்பிரீத் கவுர் (16) ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (53*) மற்றும் ரிச்சா கோஷ் (31*) அதிரடியாக விளையாடி 19 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம், இந்திய அணி, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கி அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here