“திறமைக்காக ஒரு வாய்ப்பு தரலாமே”…, கே எல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கவாஸ்கர்!!

0
"திறமைக்காக ஒரு வாய்ப்பு தரலாமே"..., கே எல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கவாஸ்கர்!!

பார்மின்றி தடுமாறி வரும் கே எல் ராகுலுக்கு எதிராக, விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல்:

இந்திய அணியின் துணை கேப்டனான கே எல் ராகுல் சமீப காலமாக பார்மின்றி தடுமாறி வருகிறார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால், இவருக்கு பதில், சுப்மன் கில் அல்லது சர்பராஸ் கான் ஆகியோருக்கு டெஸ்டில் வாய்ப்பு தரலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர், வெங்கடேஷ் பிரசாத் கூறியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், டெஸ்டின் துணை கேப்டனாக அஸ்வினை நியமிக்கலாம் எனவும் கூறியிருந்தார். இவரது இந்த கருத்துக்கள், சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனத்திற்கு கே எல் ராகுல் உள்ளாகி இருந்தார்.

ரஞ்சி டிராபி: எதிரணியை வெளுத்து வாங்கி பைனலுக்கு முன்னேறிய பெங்கால் & சௌராஷ்டிரா டீம்!!

இந்நிலையில், இவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் கே எல் ராகுலுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம். இவர், சமீப காலமாக தான் பார்மின்றி தடுமாறி வருகிறார். இதற்கு முன், அனைத்து வகை மைதானங்களிலும் சிறந்து விளங்க கூடியவராக திகழ்ந்தவர். இவரது, திறமைக்காக ஓர் வாய்ப்பு கொடுக்கலாம் என அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here