Wednesday, June 26, 2024

கொரோனாவால் குறைக்கப்பட்டு உள்ள பாடப்புத்தகங்கள் – கல்வித்துறை அறிவிப்பு..!!

Must Read

கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வி ஆண்டு:

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல திட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இப்போது, இந்த வருடத்திற்கான கல்வி ஆண்டு தொடங்கி 1 மாதம் ஆகி உள்ள இன்னும் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

HS students TN
HS students TN

கொரோனா பரவல் அச்சமே இதற்கு காரணம். இப்படியான குழப்பமா நிலையில், மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கையை முன் வைத்தனர்.

அதனால், பாடத்திட்டங்களை குறைக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர்கள், மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தது, அவர்கள் தற்போது கூறியிருப்பதாவது..

குறைக்கப்பட்ட பாடபுத்தங்கங்கள்:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வருடம் சமூக அறிவியலில் 2 பாடபுத்தங்கங்கள் இருந்தது.அதனை ஒரு புத்தகமாக குறைத்து உள்ளனர். அதே போல் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பாடபுத்தகங்களாக இருந்த வணிகவியல் 1 பாடபுத்தகமாக மாற்றப்பட்டு உள்ளது.

Books
Books

இது மட்டும் அல்லாமல், கணித வேதியல் மற்றும் இயற்பியல் பாடங்களை தவிர்த்து 2 பாடபுத்தங்களாக ஆக இருந்த புத்தகங்கள் 1 புத்தகமாக குறைக்கப்பட்டு உள்ளது.

இது இப்படி இருந்தாலும், இன்னும் கொரோனா தாக்கம் குறையவில்லை, இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் இன்னும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -