சன் டிவி பிரபலத்தின் வீட்டில் நடந்த சோக நிகழ்வு – நடுரோட்டில் நின்று கதறி அழுத பரிதாபம்!!

0
சன் டிவி பிரபலத்தின் வீட்டில் நடந்த சோக நிகழ்வு - நடுரோட்டில் நின்று கதறி அழுத பரிதாபம்!!

சன் மியூசிக் மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்த அஞ்சனா, நடுரோட்டில் நின்று கதறி அழும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் அஞ்சனா.  இதனைத் தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல டிவிகளில் இவர் பணிபுரிந்துள்ளார். இவர் கயல் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் சந்திரனுக்கு இந்த படத்தையடுத்து குறிப்பிடத்தகுந்த வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில், அஞ்சனா நடுரோட்டில் நின்று கதறி அழும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அஞ்சனாவின் மாமனாரும், சந்திரனின் தந்தையுமான சுப்பிரமணியம், அண்மையில் உயிரிழந்ததால் அவரது இறுதிச் சடங்கில் தான் அஞ்சனா இவ்வாறு கதறி அழுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரசிகர்கள் பலரும் தைரியமாக இருங்கள் என இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here