தீடிரென நின்ற இன்ஸ்டாகிராம் சேவை… பரிதவித்து போன பயனாளர்கள்!!

0

நம்பர் ஒன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் இன்று (செப் 02) நண்பகல் சில மணி நேரம் செயலியானது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் இதனை பயன்படுத்தும் மில்லியன் கணக்கான பயனாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னர் சிறிது நேரத்தில் செயலியானது செயல்பட ஆரம்பித்தது. மேலும் இந்த செய்தியானது ட்விட்டரிலும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் பயனாளர்கள்:

இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வு செய்யக்கூடிய சமூக வலைப்பின்னல் சேவையாகும். இதில் பயனாளர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் தங்களது வீடியோக்களை பதிவேற்றி மகிழ்வார்கள். இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்களில் 180 மில்லியன் மக்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டுபிடித்த அமெரிக்காவே இதை உபயோகப்படுத்துவதில் 2வது  இடத்தை தான் பிடித்துள்ளது.

 இன்ஸ்டாவில் புகுத்தப்படும் நவீன அம்சங்களால் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சமீபத்தில் கூட இன்ஸ்டா ரீல்ஸ்க்கு எத்தனை முறை வேண்டுமானாலும் லைக் செய்யும் அம்சம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல் பட்டு வரும் இன்ஸ்டாகிராம் இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் இன்ஸ்டாவை பயனர்களால் லோட் செய்யமுடியவில்லை. இதனால் இதனை பயன்படுத்துபவர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் இன்ஸ்டா முடக்கம் குறித்து புகார்களை தெரிவித்து வந்தனர். பின்னர் சில மணிநேரங்களிலே இது சரியாகிவிட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here