ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – இத மட்டும் செஞ்சீங்கன்னா சிறை தண்டனை உறுதி!!

0

அனைத்து பொதுமக்களும் பரவலாக பயன்படுத்தும், ரயில் பயணத்தின் போது, பின்பற்றவேண்டிய முக்கிய சட்டங்கள் குறித்த தகவல்களை ரயில்வே பயணிகள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

முக்கிய தகவல்:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தும் சேவைகளில் ஒன்று ரயில்வே துறை. இந்த பயணத்தின் போது, பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதற்கான சட்ட பிரிவு குறித்து நிலையான வழிகாட்டுதல்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • டிக்கெட்  அல்லது பாஸ் இல்லாமல் பயணம் செய்பவரிடம் பிரிவு 138 இன் கீழ் ரயில் புறப்பட்ட நிலையம் அல்லது பயணி பயணித்த தூரம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு, குறைந்தபட்சம் 250 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
  • மேலும், மோசடி பயணம் மேற்கொள்பவர்களிடம், பிரிவு 137 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை. ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • அதுபோல, தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால் சட்டம் பிரிவு 141 ன் கீழ் 12 மாத சிறை தண்டனை, 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் விதிகளுக்கு புறம்பாக பயணம் செய்தால், சட்டம் பிரிவு 155 (அ)இன் படி, 3 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ரயில் பெட்டிக்குள் அத்துமீறி நுழைந்தால், பிரிவு 147 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும், பாதுகாப்பற்ற ரயில் மேற்கூரையில் பயணம் செய்தால், 145 (b)இன் படி ரூ.100 அபராதமும், பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் மற்றும் கண்டபடி குப்பையை கொட்டினால் 250 அபராதமும், ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரயில்களில் பில் ஓட்டுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை விளம்பரம் செய்தால், பிரிவு 166 (b)இன் கீழ் 6 மாத சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும், பிரிவு 143 இன் கீழ் 3 ஆண்டுகள் சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

    டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

    ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

    டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

    இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

    யு டியூப் : Enewz Tamil யுடியூப்

    Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

    Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here