சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ரோகிணி முத்துவிடம் ஒரு அண்ணன நடத்துற மாதிரியா நடத்துறீங்க. உங்க ரவுடி தனத்துக்கு ஒரு அளவே இல்லையா என முத்துவை அசிங்கமாக பேச மீனாவுக்கு கோபம் வருகிறது. உடனே மாமாவ தப்பா பேசினா யாருனாலும் அடிக்க தான் செய்வோம் என்று முத்துவுக்கு சாதகமாக பேச விஜயா என் மருமகளையே எதிர்த்துப் பேசுவியா என்கிறார். அப்போது அண்ணாமலை போது எல்லாரும் நிறுத்துங்க. நான் இருக்கும்போதே இப்படி சண்டை போடுறீங்களே.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இனிமேலாவது ஒழுங்கா இருங்க என எல்லோருக்கும் அட்வைஸ் செய்கிறார். பின் மீனாவின் தங்கச்சி வீட்டுக்கு வர அவரிடம் மீனா நடந்த விஷயத்தை சொல்கிறார். இதை மறைந்திருந்து கேட்கும் விஜயா என் பிள்ளையா அடிச்சது உனக்கு சந்தோஷமா எல்லாத்தையும் உன் தங்கச்சி கிட்ட சொல்லி முடிச்சிட்டியா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். ஒரு கட்டத்தில் உன் தங்கச்சி என்ன வேலை பார்த்துட்டு இருக்கா என்று அசிங்கமாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.