327 நாட்களுக்கு முன் எப்படி போனாரோ அப்படியே மீண்டு வந்த பும்ரா…, ஆட்ட நாயகனாக மாறி அபாரம்!!

0
327 நாட்களுக்கு முன் எப்படி போனாரோ அப்படியே மீண்டு வந்த பும்ரா..., ஆட்ட நாயகனாக மாறி அபாரம்!!
327 நாட்களுக்கு முன் எப்படி போனாரோ அப்படியே மீண்டு வந்த பும்ரா..., ஆட்ட நாயகனாக மாறி அபாரம்!!

சர்வதேச இந்திய அணியானது, அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியை நேற்று விளையாடியது. முதுகு வலி காரணமாக கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த பும்ரா தகுந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, முழு உடற் தகுதி பெற்று 327 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் கேப்டனாக இந்த போட்டியில் இடம் பிடித்தார். டெத் ஓவர் ஸ்பேசிலிஸ்ட்டான இவர், அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் மூலம், தனது பார்மை நிரூபித்த இவர் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது இந்திய வீரரானார். இதற்கு முன், அஸ்வின் இலங்கைக்கு எதிராகவும்(2016), புவனேஷ்வர் குமார் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் (2022), ஹர்திக் பாண்டியா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் (2023) இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இந்த போட்டி மூலம், கேப்டனாகவும் அணியின் சிறந்த வீரராகவும் தன்னை நிரூபித்த பும்ரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். கேப்டன்சி குறித்து பும்ரா, “நீங்கள் கேப்டனாக இருக்கும் போது, தங்களது செயல்திறன் மட்டுமல்ல தங்கள் அணியைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

IND vs IRE: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா…, 2 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து தோல்வி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here