பொதுமக்கள் புகார் அளிக்க – தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்!!!

0

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

தனிப்பிரிவு இணையத்தளம்:

பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக & தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் புகாரை தமிழில் பதிய தமிழ் வடிவம் என்ற பகுதியை கிளிக் செய்து அதன் கீழ் இரண்டாவதாக தோன்றும்  Lodge Your Grievance அல்லது   கோரிக்கை பதிவு என்பதை சொடுக்கி உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here