பிரபல சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை.., அசந்த நேரத்தில் 2 பெண்கள் கைவரிசை!!

0
பிரபல சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை.., அசந்த நேரத்தில் 2 பெண்கள் கைவரிசை!!
பிரபல சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை.., அசந்த நேரத்தில் 2 பெண்கள் கைவரிசை!!

பிரபல சீரியல் காமெடி நடிகரான அழகப்பன் சூட்டிங் ஸ்பாட்டில் தனது 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தொலைத்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார்:

சீரியலில் நடிக்கும் நடிகர்கள், மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான பல டாப் சீரியல்களில் காமெடி ரோலில் நடித்து அசத்தியவர் நடிகர் அழகப்பன். இவர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில், ஹீரோ புவிக்கு நண்பர் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சன் டிவியின் புகழ்பெற்ற தொடரில் நடித்து வருகிறார். ஷூட்டிங்குக்காக பெரம்பூரில் உள்ள தனியார் துணி கடைக்கு சென்றிருந்த அவர், தனது விலை உயர்ந்த ஐபோனை அங்கிருந்து மேசை மீது வைத்துவிட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கிறார்.

பல சர்ச்சைக்கு பின் உண்மை காதலை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் ஆயிஷா.., கட்டியணைத்த புகைப்படம் வைரல்!!

திரும்பி வந்து பார்த்தபோது ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள அவரது ஐபோன் காணாமல் போனது. இது குறித்த சிசிடிவியை ஆய்வு செய்யும் போது கடைக்கு வந்த 2 பெண்கள் அதை லாவகமாக எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. இதையடுத்து நடிகர் அளித்த புகாரின் பேரில் தற்போது போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here