சபரிமலையில் சர்ச்சையை கிளப்பிய சிரஞ்சீவி – இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்??

0
சபரிமலையில் சர்ச்சையை கிளப்பிய சிரஞ்சீவி - இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்??

கடந்த 13 ஆம் தேதி அன்று பிரபல நடிகரான சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது 50 வயதிற்கும் குறைவான பெண்ணை கோவிலுக்குள் அனுமதித்துவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஐயப்பன் கோவிலில் சிரஞ்சீவி:

மாசி மாத பூஜைக்காக கடந்த 12 ஆம் தேதி அன்று கேரளா சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. மேலும் 13 ஆம் தே திஅன்று நடந்த பூஜையில் பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி கலந்து கொண்டார். இவருடன் இணைந்து சிரஞ்சீவியின் மனைவி, பீனிக்ஸ் குரூப் உரிமையாளரகளான சுரேஷ், கோபி மற்றும் அவரது மனைவிகளும் கலந்து கொண்டனர்.

ஐயப்பன் கோவிலில் 50 வயதை பூர்த்தியடையாத மகளிர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பதே காலங்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவியுடன் சென்ற பெண்மணி ஒருவருக்கு 50 வயது ஆகவில்லை எனவும், அவரை கோவிலுக்குள் அனுமதித்தது தவறு எனவும் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து கோவில் உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

விவாகரத்து பெற்ற மிதப்பில் ராதிகாவுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த கோபி – அதிர்ந்த இணையதளம்!!

அதாவது 1966 ஆம் ஆண்டு பிறந்த அந்த பெண்மணிக்கு தற்போது 55 வயதாகுகிறது என்றும் அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் என அனைத்தையும் சரி பார்த்த பின்னரே கோவிலுக்குள் அனுமதித்தோம் என கோவிலின் சார்பில் கூறப்பட்டுள்ளது. யாரும் இது குறித்தான தவறான தகவலை பகிர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here