தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகை அனு இம்மானுவேல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அனு இம்மானுவேல்:
தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். முதல் தமிழ் திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
அதன் பின்னர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நன்கு பிரபலமானார். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் வந்து விட்டது என்றே கூறலாம். தற்போது இவர் ராவணாசுரா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அனு. அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை மயக்குவதை வழக்கமாக வைத்து உள்ளார். அது போலவே தற்போது கிளாமரான ஒரு புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.