துப்பரவு பணிக்கு ஆட்கள் தேவை, மாதம் ரூ.18 லட்சம் சம்பளம் – பிரிட்டன் அரண்மனை அறிவிப்பு!!

0

நாட்டில் உள்ள லட்சக்கணமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் போதிய வருமானம் மற்றும் வேலை இன்றி தவித்து வரும் நிலையில், பிரிட்டனில் மாதம் 18 லட்ச ரூபாய் சம்பளத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக வெளியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

துப்புரவு பணி:

பிரிட்டன் அரண்மனையில் ரூ.18 லட்சம் சம்பளத்தில், துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரிட்டனில் மக்களாட்சி நடைபெற்றாலும், அரச குடும்பத்திற்கு தனி மரியாதை உள்ளது. இக்குடும்பத்தினருக்கு லண்டனின் பக்கிங்காம், விண்ட்ஸர் உள்ளிட்ட பல இடங்களில் அரண்மனை உள்ளது. தற்போது, விண்ட்ஸர் அரண்மனையில் துப்பரவு பணியாளர் (நிலை 2 அப்பரீன்ட்டிஸ்ஷிப்) வேலைக்கு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், கணிதத்தில் போதிய அறிவு பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ரூ. 18.5 லட்சம் சம்பளத்துடன் தங்குமிடம், சாப்பாடு தரப்படும். வாரத்தில் 5 நாட்கள் பணி புரியும் இவர்கள், அரண்மனையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மற்ற அரண்மனைக்கு செல்வதற்கு, போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை உண்டு. தேர்வாகும் நபருக்கு 13 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு, பணி நிரந்தரமாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here