தமிழக  மீனவ குடும்பங்களுக்கு  ரூ. 12500 நிவாரணம்., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழக  மீனவ குடும்பங்களுக்கு  ரூ. 12500 நிவாரணம்., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!
கடல்களில் கலப்பதினால் நீர் அசுத்தம் அடைவதுடன் அதில் வாழும் உயிரினங்கள் மற்றும் நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.  அந்த வகையில் சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கடலில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய் கழிவுகள் 20 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு பரவி இருந்தது.
இதனால் கடல் அசுத்தம் அடைந்ததை தாண்டி மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக நிவாரணத் தொகை அளிக்கும் படி பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தற்போது தமிழக மீன்வளத்துறை பதிலளித்துள்ளது. அதாவது எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2301 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12,500 நிவாரணம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here