கொரோனா அதிரடி ஆபர் – ரூ. 251 விலையில் ரிலையன்ஸ் ஜியோவின் Work From Home அதிரடி டேட்டா பேக்..!

0

ரிரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு Work From Home என்ற புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

Work From Home..!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அரசாங்கம் மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் பணியாட்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவிக்கப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்தே பணியாற்றுவோருக்காக பி.எஸ்.என்.எல். தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஆக்ட் ஃபைபர்நெட் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Work From Home என்ற சலுகையை அறிவித்து உள்ளது.

ஜியோ சலுகை..!

ரூ. 251 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 51 நாட்கள் ஆகும். இந்த சலுகையில் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here