உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கா??வீட்டிலே பரிசோதனை செய்துகொள்ளலாம்!!

0

இந்தியாவில் தற்போது கொரோனாவின் வீரியத்தை துல்லியமாக கண்டறிய பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலே பரிசோதனை மேற்கொள்ளும் வழிமுறையை ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை:

இந்தியாவில் சுமார் இரண்டு மாத காலமாகவே கொரோனா நோய்த்தொற்று மக்களிடையே மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது நாட்டில் தடுப்பூசி பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வதற்கு பரிசோதனை பணிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக நாட்டில் தற்போது தினசரி 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இதனை விரைவுபடுத்த ஐசிஎம்ஆர் புதிய வழிமுறை ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ரேப்பிட் ஆன்டிஜென் முறையை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதில் பாசிட்டிவ் என்று வந்தால் மேலும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் நெகட்டிவ் வந்தால் RTPCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றைய நிலவரம் – வாகன ஓட்டிகள் ஷாக்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகியவர்கள் மட்டுமே இந்த முறையை மேற்கொள்ள வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. தற்போது CoviselfTM Covid-19 OTC Antigen LF ஆகிய ரேப்பிட் கருவிக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இதனை மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதில் விளக்கப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி மக்கள் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here