அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சரவை ஒப்புதல்!

0
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்  அறிவிப்பு - அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான 2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த வாரம் நான்கு சதவீதம் உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசை பின்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் இது குறித்தான அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளது. இந்த பட்டியலில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் பஜன்லால் சர்மா வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். முதல்வரின் முடிவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது நான்கு சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்தம் ஐந்து சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அறிவிப்பின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் 4.40 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலமாக ராஜஸ்தான் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 1240 கோடி நிதி சுமை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here