அடுத்த 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு…,புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு!!

0
அடுத்த 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு...,புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு!!
அடுத்த 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு...,புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசாங்கம் மக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசைப் போல புதுச்சேரி அரசும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறது. இந்நிலையில், வரும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel

அதாவது, புதுச்சேரியில் மின்சாரக் கொள்முதல் விலை உயர்வை ஈடுசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட இழப்பீடை சரி செய்யும் விதமாக 100 யூனிட் வரை பயன்படுத்திய வீடுகளுக்கு 25 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் 300 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்திய வீடுகளுக்கு 40 பைசாக்களுக்கு மேல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களே ரெடியாகுங்க…,இந்த தேதியில் ‘தளபதி 68’ ! வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here