ஊரடங்கு முடியும் வரை இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

0

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது,ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு செல்ஃபோன்,டிடிஹெச் சேவையை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மே 3 வரை மீண்டும் ஊரடங்கு

மே 3 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லமுடியாத நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அளித்தல், பொதுமக்கள் வெளியே வராமலிருப்பதை உறுதிசெய்ய வீடு தேடிச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் என முக்கியமான சலுகைகள் பலவற்றை பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணைகள் செலுத்துவதற்கான அவகாசம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கடன், வட்டி சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலவச டேட்டா மற்றும் DTH சேவை கோரி மனு

ஊரடங்கள் மக்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதுவும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே கால அவகாசம் குடுக்கபட்டுள்ளது,ஊரடங்கு நேரத்தில் மக்கள் யாரும் மனரீதியால் பாதிப்பு அடையாமல் இருக்க வேண்டி தேவையான நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட கோரப்பட்டுள்ளது.

அதனால் செல்ஃபோனில் இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாகவும் விரும்பியவருடன் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்வது, பொழுதுபோக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீடியோ ஸ்டிரீமிங் வலைதளங்களை பார்ப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாக குறைக்கப்படும் என்றும் கருத்தில் கொண்டு இதை அனைத்தும் இலவசமாக வழங்க  மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் மனோச்சார் பிரதாப் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய,மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உணவு மற்றும் தங்கும் இடம் உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும், ஊரடங்கு போன்ற காலக்கட்டத்தில் மக்களுக்கு உடல் மற்றும் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள ஆரோக்கியம் மிகவும் அவசியம் ஆகும். குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பிரிந்து வாழ்வோருக்கு மன ரீதியில் அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here