Wednesday, June 26, 2024

மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி – தெற்கு ரயில்வே முடிவு!!

Must Read

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் ஊழியர்கள் இனி வரும் நாட்களில் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வரவினை பொறுத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கத்தினை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொது போக்குவரத்தான ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களில் அரசு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவித்து இருந்தது. இதன் காரணமாக மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ரயில் சேவைகள் துவக்கப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மின்சார ரயில் சேவைகள் செயல்படாமல் இருந்து வந்தன. தற்போது தெற்கு ரயில்வே இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டதாவது,  கொரோனா பரவல் குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்கள் இனி மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.

தெற்கு ரயில்வே முடிவு:

அதே போல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகதர்சம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் , அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் அது போன்ற சேவைகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மின்சார ரயில்கால் பயணிக்க விரும்பும் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் இருந்து அங்கீகார கடிதம் மற்றும் புகைப்பட அடையாள அட்டை பெற்றிருத்தல் அவசியம். பயணிகளின் வரிவினை பொறுத்து கூடுதல் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -