பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு!!

0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தற்போது அதன் காலஅவகாசம் முடிவடைய போகிறது. எனவே இன்று அல்லது நாளை ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளத்து.

ராஜிவ் காந்தி கொலை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் முக்கிய குற்றவாளிகளாக கருதி கைது செய்யப்பட்டனர். அதில் நளினிக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நளினி மேல்முறையீடு செய்தார். எனவே அவருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்தனர். தற்போது இதேபோல் பேரறிவாளன் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் ஓர் மனுவை அளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது இந்த 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும் அதற்காக 7 நாட்கள் கால அவகாசத்தையும் வழங்கினார். இவர்கள் 7 போரையும் கடந்த 2018ம் ஆண்டில் விடுவிக்க அமைச்சரவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சௌந்தர்யாவை அழைத்து வர ஹேமாவிற்கு அட்ரஸ் எழுதி தரும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

ஆனால் இது குறித்து ஆளுநருக்கு அனுப்பிய மனுவில், ஆளுநர் எந்த முடிவையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இது குறித்து ஆளுநர் முடிவெடுக்கும் நிலையில் உள்ளார். இதுகுறித்து இன்று அல்லது நாளை முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் ஆளுநர் இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் வழக்கறிஞருடன் ஆலோசித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here