இனி அரசு பேருந்துகளில் பொது மக்களுக்கு சூப்பர் வசதி – போக்குவரத்து துறையின் புதிய அறிமுகம்!

0

அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் வசதி கொண்டு வரப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு பஸ்களில் புதிய வசதி:

தமிழகம் முழுவதும் குறைவான தூரத்தில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க அரசு பேருந்துகள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் பார்சல் அனுப்பும் வசதியை கொண்டு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் பிரசித்தி பெற்ற பொருட்களை மற்ற ஊர்களுக்கு கொண்டு செல்ல தற்போது வரை லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது போக்குவரத்து துறையின் இந்த வசதியின் கீழ் இனி ஆகஸ்ட் 3 முதல் வணிகர்கள் தினமும் பார்சல் அனுப்பும் பேருந்துக்கு கட்டணமாக மாத வாடகை அல்லது தினசரி வாடகை கொடுத்து இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மக்கள் இந்த சேவையை பெற அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.குறிப்பாக திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் மக்கள் பார்சல்களை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனுப்பிட வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here