Home செய்திகள் மாநிலம் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி, மளிகை கடைகள் & பெட்ரோல் பங்குகள் நேரம் குறைப்பு – தமிழக அரசின் அறிவிப்புகள்..!

ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி, மளிகை கடைகள் & பெட்ரோல் பங்குகள் நேரம் குறைப்பு – தமிழக அரசின் அறிவிப்புகள்..!

0
ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி, மளிகை கடைகள் & பெட்ரோல் பங்குகள் நேரம் குறைப்பு – தமிழக அரசின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் இதுவரை 38 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

என்னென்ன அறிவிப்புகள்..?

  • Swiggy, Zomato மற்றும் Uber Eats போன்ற நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் 9.30 மணி வரை சிற்றுண்டி, மற்றும் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவு டெலிவரிக்கு அனுமதி. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவு டெலிவரிக்கு அனுமதி என அரசு அறிவித்துள்ளது.
  • ஆதரவற்றோருக்கு சமைத்த உணவை வழங்க விரும்பும் நபர்கள் நேரடியாக வழங்கக்கூடாது விரும்பும் உணவு பொருட்களை சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிக் கொள்ளலாம் இந்த உத்தரவுகள் வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தங்களை போக்கவே கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களது மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள்.
  • மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.
  • தமிழகத்தில் தற்போது 10 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகள் என 14 இடங்கள் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here