இளைஞர்களிடம் ட்ரெண்ட் ஆகும் “போட்டோ மாஸ்க்”..!

0

தற்போது உள்ள சூழலில் கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வர கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளிய வர தடை வைத்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது முகக்கவசத்தில் “போட்டோ மாஸ்க்” ட்ரெண்ட் ஆகி வருகிறது.

முகக்கவசம்

தற்போது உள்ள சூழலில் முகக்கவசம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாகியுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அரசு அபராதமும் வசூலித்து வருகின்றனர். மேலும் மக்கள் இதனை தங்கள் ஆடைக்கு ஏற்றார் போலவும் அணிந்து கொள்கின்றன்றனர்.

Top 10 Billy Buddha T Shirt Manufacturers in Tirupur - टी ...

மேலும் அந்த முகக்கவசத்துடனே வலம் வருகின்றன. மேலும் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் மாஸ்க்குகளை கடைகளில் வாங்குவதைவிட, அடிக்கடி துவைத்து பயன் படுத்தும் துணி மாஸ்க்குகளை மக்கள் வீட்டிலேயே தயாரித்து அணிகின்றனர்

“போட்டோ மாஸ்க்”

Tamil Nadu: Protective masks get a 'filmy' face in cinema-crazy state

இதை தொடர்ந்து தற்போது போட்டோ மாஸ்ட் டிரேடிங்கில் உள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த மெர்வின் அன்றோ என்பவர் அவரவர்களின் முகத்தை போன்றே மாஸ்க் செய்து விற்பனை செய்து வருகிறார். டி-ஷர்ட், கேடயம், காப்புகளில் புகைப்படத்தை அச்சிட்டு வந்த இவர் தற்போது மாஸ்க்கிலும் இவ்வாறு தயாரித்து வருகிறார் மேலும் இதனை துவைத்து மறுபடியும் உபயோகப்படுத்தும் வகையில் அமைத்துள்ளார்.

மெர்வின் ஆன்றோ

இதை குறித்து மெர்வின் ஆன்றோ கூறுகையில், “`நம் முகத்தின் அமைப்பைப் போன்றே மாஸ்க் அணிவது புதிய டிரெண்டாக உள்ளது. நிறைய பேர் மாஸ்க் போடுவது இல்லை. இந்தமாதிரி அவங்க போட்டோவை வைத்தே மாஸ்க் தயாரித்து போடும்போது அவர்களுக்கு அதை அணிய வேண்டும் என்ற ஆர்வம் வரும். வாடிக்கையாளரை புகைப்படம் எடுத்து, துணியில் பிரின்ட் செய்யும் தொழில்நுட்பம் மூலம் 15 நிமிடத்தில் மாஸ்க் தயாரித்து கொடுக்கிறோம். அவர்களின் தோலின் நிறத்திலேயே தயாரிப்பதால் திடீரென பார்த்தால் வித்தியாசம் தெரியாத அளவில் மாஸ்க் அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் இதுபோன்று மாஸ்க் தயாரிப்பதாக அறிந்து நானும் அந்த முயற்சியில் இறங்கினேன். இப்போது அது டிரெண்டாகிவிட்டது. குறைந்தது 120 ரூபாய்க்கு இந்த மாஸ்க்கை விற்க வேண்டும். ஆனால், நாம் 80 ரூபாயில் இருந்தே மாஸ்க் தயாரித்துக்கொடுக்கிறேன். துணியின் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடும். எப்படியாவது கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here