நேதாஜி இறப்பு இவ்ளோ கொடூரமானதா., மர்ம முடிச்சுகளை அவிழ்த்த பேரன் – திடுக்கிடும் உண்மைகள்!!

0
நேதாஜி இறப்பு இவ்ளோ கொடூரமானதா., மர்ம முடிச்சுகளை அவிழ்த்த பேரன் - திடுக்கிடும் உண்மைகள்!!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இறப்பிற்கான காரணம் பற்றியும், அவரது இறுதி காலம் பற்றியும் அவருடைய பேரன் சுகதா போஸ் பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.

 நேதாஜியின் பேரன்:

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை  தோற்றுவித்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது. சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும், என்று விரும்பிய இவர் அதை சுவாசிக்காமல் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவரது மரணத்தில் இன்று வரை தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவரது இறப்பு குறித்த முக்கிய உண்மைகளை அவரது பேரன், ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதாவது நேதாஜி இறப்பு பற்றி, கிருஷ்ணா போஸ் எழுதிய “The life and struggle of Netaji Subhas Chandra Bose” என்ற புத்தகத்தில் அவரின் மொத்த வாழ்க்கை நிகழ்வுகளையும்  குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஜப்பானில் உள்ள ரென்கோஜி கோயிலில்  நேதாஜியின் அஸ்தி உள்ளதாகவும், அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து உரிய மரியாதை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாங்காங்கில் இருந்து வியட்நாம் சைகான் நகருக்கு நேதாஜி சென்றார்.

பின் சைக்கானில் இருந்து தைப்பேவுக்கு முதன்மை பணியாளர் ஹபீபுர் ரஹ்மானுடன் சேர்ந்து விமானத்தில் பயணிக்கும் போது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாகவும், அதில் நேதாஜி  மோசமாக தீயில் எரிந்து துடிதுடித்து இறந்து போனதாகவும்  நேதாஜியின் உதவியாளர் ஹசன் கூறியுள்ளார். இந்த தகவல்கள் இத்தனை ஆண்டுகளுக்கு பின் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here