மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு!!

0
மருத்துவர்
மருத்துவர்

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 17 அல்லது 18ம் தேதி முதல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து இருந்த நிலையில், இன்று அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% உள் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் இம்முறை 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மருத்துவ கலந்தாய்வு:

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பது எட்டாக் கனி ஆகி விட்டது. இதனால் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் சட்ட வரைவிற்கு அனுமதி வழங்கினார். இம்முறை அரசு வழங்கிய இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த ஏராளமான மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இடஒதுக்கீடு காரணமாக அவர்களில் 395 பேருக்கு இம்முறை மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் தேதி நவம்பர் 3 தொடங்கி 12ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான தரவரிசை பட்டியல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் இன்று வெளியிடப்படுகிறது. கொரோனா அச்சத்திற்கு மத்தியில் மருத்துவ கலந்தாய்வு நேரடியாக நடைபெறும் என அரசு கூறியுள்ளது. இதில் அரசு கல்லூரிகளில் உள்ள 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 1,949 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது முடிந்து வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இம்முறை எடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here