தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் மகாராஜா. பெரிய எதிர்பார்ப்பில் பல தடைகளை உடைத்து ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டுமன்றி, நல்ல வசூலையும் அள்ளி வருகிறது.
மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து அபிராமி, நட்டி நடராஜ், மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த, இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நேற்று வெளியான மகாராஜா படம், உலக அளவில் ரூ. 7 கோடி மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இது விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்று பலரும் கூறி வருகின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!