லக்னோவின் வெற்றியால் ஒரு இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்…, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புகள் எப்படி??

0
லக்னோவின் வெற்றியால் ஒரு இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்..., பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புகள் எப்படி??
லக்னோவின் வெற்றியால் ஒரு இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்..., பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்புகள் எப்படி??

இந்தியாவில் 10 அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், லக்னோ (LSG) அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மும்பை இந்தியன்ஸ் சார்பாக இஷான் கிஷன் (59), ரோஹித் சர்மா (37) என நல்ல அடித்தளம் கொடுத்த போதும், 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால், மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய மீதமுள்ள ஒரு லீக் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அவ்வாறு மும்பை அணி வென்றாலும், RCB அணி தனக்கு மீதமுள்ள அடுத்த இரு போட்டிகளையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால், மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டியது தான். தற்போது உள்ள புள்ளிப் பட்டியலின் படி, குஜராத் அணி மட்டுமே 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும், CSK மற்றும் LSG அணிகள் அடுத்து வரவுள்ள ஒரு போட்டியை வென்றால், பிளே ஆப்புக்கு முன்னேறும். இதையடுத்து, மீதமுள்ள ஒரு இடத்திற்கு தான், மும்பை, RCB, பஞ்சாப் (PBKS) ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் வெற்றி தோல்வி மற்றும் ரன் ரேட் அடிப்படையிலேயே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here