ஒரு கொரோனா தொற்று கூட இல்லாத இந்தியாவின் லட்ச தீவு…

0

கொரோனா தொற்றை பொறுத்த வரையில் ரசியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா. இது வருத்தமளிக்கும் செய்தியெனினும் இந்தியாவின் மிகச்சிறிய தீவான லச்சத்தீவானது கொரோனா தோற்றே இல்லாத யூனியன் பிரதேசமென்ற பெருமையினை பெற்றுள்ளது.

கொச்சியில் இருந்து சுமார்  380 கி. மீ தொலைவில் அமைந்துள்ள லட்சத்தீவுகள் 64,000 மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாக விளங்குகின்றது. இந்தியாவின் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை ஒரு கொரோனா தொற்று கூட இல்லாத பிரதேசமாக லட்சத்தீவுகள் விளங்குகின்றது. இதற்கு காரணம் இந்த மாநிலத்தின் நன்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகும்.

கவரட்டியின் துணை கலெக்டரான காசிம் கூறுகையில் இதுவரை லட்ச தீவினை பூர்விகமாக கொண்டவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சிகிச்சைக்காக வெளி மாநிலங்களுக்கு சென்ற 1000 பேர் கூட தீவிர கண்காணிப்பிற்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஐந்து மாதங்கள் வரை வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என யாரும் நாட்டினுள் அனுமதிக்கப்படவில்லை.

வெளியூரில் இருந்து வரப்பட்ட லட்ச தீவு வாழ் மக்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரானா தொற்று இல்லையென்று உறுதி செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகும் மக்கள் அனைவரும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மக்கள் தொகை குறைவாக இருப்பதே எளிதான கட்டுப்பாட்டிற்கு காரணமென காசிம் விளக்கமளித்துள்ளார்.

லட்ச தீவிலிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவர்க்கும் ஊரடங்கு நேரத்தில் மூன்று வேளை உணவுகள் தவறாமல் வழங்கப்பட்டது.மேலும் அவர்களின் எதிர் கால மருத்துவ தேவைகளுக்காக நவீன படுக்கை வசதியுடன் கொச்சி அரசினர் விருந்தினர் மாளிகை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

லட்ச தீவிலிருந்து இதுவரை சுமார் 6 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள நிலையில் அவர்கள் அனைவருமே சூழ்நிலைகள் சீராகி பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட்ட பின்பே திரும்பவும் அனுமதிக்கப்படுவர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் லட்சத்தீவு அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here