மக்களே உஷார்…, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…, எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

0
மக்களே உஷார்..., இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..., எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!
மக்களே உஷார்..., இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..., எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கன மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது கேரளா மாநிலத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளது. அதாவது, கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 16) மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தொடர்ந்து 5 நாட்கள் மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிவாரணப் பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிவாரணப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மக்கள் உடனே தகவல் தெரிவிக்க உதவி எண்களையும் அளிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

  • திருவனந்தபுரம் தாலுகா: 0471 2462006, 9497711282
  • நெய்யாற்றின்கரை தாலுகா: 0471 2222227, 9497711283
  • கட்டக்கடா தாலுகா: 0471 2291414, 9497711284
  • நெடுமங்காடு தாலுகா: 0472 2802424, 9497711285
  • வர்கலா தாலுகா: 0470 2613222, 9497711286
  • சிறையின்கீழ் தாலுகா: 0470 2622406, 9497711284

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here