மாநிலத்தில் பரவும் புது வகை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் – ஒருவர் பலி! சுகாதாரத்துறை அதிர்ச்சி!!

0
மாநிலத்தில் பரவும் புது வகை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் - ஒருவர் பலி! சுகாதாரத்துறை அதிர்ச்சி!!

கேரள மாநிலத்தில், புதிதாக பரவிவரும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு, அம்மாநிலத்தின் திருச்சூரைச் சேர்ந்த ஒருவர் பலியாகி இருப்பது, அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுவகை காய்ச்சல்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமே, இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது புது வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று கேரளா மாநிலத்தில் பரவி வருகிறது. கொசுக்கள் மூலமாக பரவும், வெஸ்ட் நைல் என்ற வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குலெக்ஸ் என்ற கொசுக்கள் மூலமாக, பரவும் இந்த வைரஸ் காய்ச்சல் 80 சதவீத மக்களுக்கு அறிகுறிகளை ஏற்படுத்தாமல் பாதிப்புக்கு உள்ளாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்ட பறவைகளை மொய்க்கும் கொசு வாயிலாக இந்த வைரஸ் மனிதனை தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாநிலத்தில், இந்தப் புதுவகை வைரஸ் காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்திருப்பது மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here