உலக நாயகனின் அடுத்த மாஸ்டர் பிளான் – இந்த முக்கிய விஷயத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்றுலா பயணம்!

0
He is Back.. தடைகளை தகர்த்தெறிந்த கமல் ஹாசன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்!

“மக்கள் நீதி மய்யம்” கட்சிக் கட்டமைப்பை கூடுதல் கவனத்தோடு வலுப்படுத்த வேண்டி தமிழகமெங்கும் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடர இருப்பதாக அக்கட்சி தலைவர் கமல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் சுற்றுலா பயணம்:

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை முறியடித்து வருகிறது.இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த நடவடிக்கையாக தனது கட்சியை மேம்படுத்துவதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.இதனை தொடர்ந்து நேற்று மாநில தலைமையகத்தில் “மக்கள் நீதி மய்யம்”கட்சி தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில் வருகிற 2024-ல் நடக்க இருக்கும் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தவும் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கட்சி நிர்வாகிகளுடன் கமல் உரையாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்தோடு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசி தன் பயணத்தை தொடர உள்ளதாகவும், அதை ஏற்பாடு செய்யுமாறும் நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளார். அதோடு “மக்கள் நீதி மய்யம்” கட்சியை மேம்படுத்தும் பணியை முதலில் மக்களிடம் இருந்து ஆரம்பிப்பதாகவும் மேலும் கட்சி கட்டமைப்புகளை கூடுதல் வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் முதலில் செல்வதாகவும் மாநில நிர்வாகிகளிடம் கமல் ஹாசன் உரையாற்றியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here