அட்ரா சக்க., 2 நாட்களில் ஜெயம் ரவியின் சைரன் படம் செய்த வசூல் இத்தனை கோடியா??

0
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது THUG LIFE திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அறிமுக இயக்குனர் அந்தோணி இயக்கிய சைரன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்க, கௌஷிக் மஹாதா, யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் பிப்ரவரி 16 ஆம்‌ தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் சைரன் படம் ரூ. 6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here