ஐடி ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை – Work From Home சேவையை உடனே முடிங்க! நிறுவனங்கள் பகீர்!!

0
ஐடி ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை - Work From Home சேவையை உடனே முடிங்க! நிறுவனங்கள் பகீர்!!

நாட்டில் உள்ள பல முன்னணி ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகப் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், இல்லையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

நிறுவனங்கள் பகீர்:

இந்தியா முழுவதும் உள்ள, பிரபல ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த கோவிட்-19 தொற்று காலத்தில், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்தியது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், பல நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலக பணிக்கு அழைக்கின்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் குறிப்பாக டிசிஎஸ் மற்றும் கேப்ஜெமினி போன்ற நிறுவனங்கள், ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஊழியர்களை வாரத்திற்கு 3 முறையாவது நிச்சயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை .,, தியேட்டரில் திரைப்படம் பார்த்த முன்னாள் பிரதமர்!!

இதுகுறித்து உத்தரவிட்ட டிசிஎஸ் நிறுவனம், ஊழியர்களின் HR உடனடியாக ஒரு பெயர் பட்டியலை தயாரிக்குமாறும், அவர் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களிடம் கடுமை காட்டாமல் நவம்பர் 14 க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி, 45,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் எப்போதும் பணி செய்வதால், புதிய ஊழியர்களை இந்த விஷயத்தில் நாங்கள் கட்டாயப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். முன்னணி ஐடி நிறுவனங்களின் இந்த அதிரடி உத்தரவு, ஊழியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here