கோவா அணியை பந்தாடிய ஏடிகே மோகன் பகான்…, டாப் 3 க்கு முன்னேறி அசத்தல்!!

0
கோவா அணியை பந்தாடிய ஏடிகே மோகன் பகான்..., டாப் 3 க்கு முன்னேறி அசத்தல்!!
கோவா அணியை பந்தாடிய ஏடிகே மோகன் பகான்..., டாப் 3 க்கு முன்னேறி அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், கோவா அணிக்கு எதிரான போட்டியை கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணி வென்று புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடர் 11 அணிகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று ஏடிகே மோகன் பகான் அணிக்கு எதிராக கோவா அணி போட்டியிட்டது. இந்த போட்டியின் 9வது நிமிடத்திலேயே, ஏடிகே மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடோஸ் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழி செய்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, கோவா அணியின் அன்வர் அலி 25வது நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின் ஆரம்ப நிமிடத்திலேயே ஏடிகே மோகன் பகான் அணியின் ஹ்யூகோ பூமஸ் ஒரு கோல் அடித்தார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை வெளியிட்ட பிசிசிஐ…, ஹர்மன்பிரீத், மந்தனா தலைமையிலான படை இதோ!!

இதன் பின் கோல் அடிக்க தவறிய கோவா அணி, 1-2 என ஏடிகே மோகன் பகான் அணியிடம் வீழ்ந்தது. இதனால், புள்ளிபட்டியலில், ஏடிகே மோகன் பகான் அணி 23 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், கோவா அணி 19 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், மும்பை சிட்டி அணி தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here