வெற்றி பாதைக்கு திரும்பிய டெல்லி…, லக்னோ அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

0

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், சோஃபி டேவிட் வார்னர் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப பிருத்வி ஷா சற்று அதிரடி காட்டி 32 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜேக் ஃப்ரேசர் 55 ரன்கள் அடித்து, டெல்லி அணியின் வெற்றியை 18.1 ஓவரில் உறுதி செய்தார். இதன் மூலம், டெல்லி அணியானது, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here