கூகுள் வருவாயில் 85% பங்கை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் – INS கோரிக்கை!!

0

கூகிள் நிறுவனம் பதிவிடும் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து 85 சதவீதத்தை செய்தி தாள் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் தலைவர் கூகிள் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

செய்தித்தாள் நிறுவனங்கள்

இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்களை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கு காரணம்,வலைத்தளங்களில் மக்கள் அன்றாட செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இதன் காரணமாக செய்தித்தாள்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு வருமானம் கணிசமாக குறைந்து விட்டது.

ராஜா ராணி 2 – தன் தாயிடம் உண்மையை போட்டு உடைக்கும் சரவணன்! சந்தியாவை ஏற்றுக் கொள்வாரா சிவகாமி!!

இதனை சரி செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் ஒரு கடிதத்தினை கூகிளின் இந்திய நிறுவனத்தின் மேலாளர் சஞ்சய் குப்தாவிற்கு ஒரு கடிதத்தினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வலைதள செய்திகளை தான் நாடுகின்றனர். இதனால் செய்தித்தாள்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“இது இப்படியாக இருக்க இணையதள விளம்பரங்களுக்கான வருமானத்தில் கூகுள் நிறுவனம் பெரும் பங்கினை எடுத்து கொள்கின்றது. இதனால் நிலைமை மேலும் மோசம் அடைந்து விடுகின்றது. இதனால் செய்திதாள்களில் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு கூகிள் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும். அதே போல் விளம்பரங்களில் இருந்து பெறப்படும் வருமானத்தில் 85 சதவீதத்தை பதிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும்” இவ்வாறாக அதில் குறிப்பிடடுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here