11 ஆண்டுகளில் இல்லாத சரிவு – அதல பாதாளத்திற்கு சென்ற இந்தியப் பொருளாதாரம்..!

0

ந்தியாவில் இதுவரை கண்டிடாத சரிவை இந்த ஆண்டு கண்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக இருக்குமா என சந்தேகப்படுகின்றனர்.பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

11 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்த விவரம் இன்று இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை கூறியுள்ளது.சென்ற நிதியாண்டின் நான்கு காலாண்டுகளுக்குமான தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20இல் 4.2% ஆக உள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலாண்டிற்கான முடிவுகள் & விவரங்கள்

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை அடுத்து  இரண்டாவது பெரிய துறையான கட்டுமானத் துறை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இரண்டாவது காலாண்டில் 2.2% ஆக சரிவடைந்தது. நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றதால்  ஜூன் காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும்.

இந்த மாதத்தில், சிமெண்ட் மற்றும் எஃகு உற்பத்தி முறையே 86 சதவீதம்மற்றும் 83.9 சதவீதமாக ஆக சரிவடைந்தது. அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி முறையே 22.8 சதவீதம்  மற்றும் 15.5 சதவீதம்  சரிவடைந்தது. இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, அல்லது பி.எம்.ஐ, ஏப்ரல் 27.4 ஆக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது, அதே நேரத்தில் வர்த்தக ஏற்றுமதி 60 சதவீதம் சரிவடைந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here