தொடர்ந்து ஏற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு.,அமெரிக்க டாலரை வீழ்த்தி புதிய உச்சம்! பங்குதாரர்கள் மகிழ்ச்சி!!

0
money
தொடர்ந்து ஏற்றத்தில் இந்திய ரூபாய் மதிப்பு.,அமெரிக்க டாலரை வீழ்த்தி புதிய உச்சம்! பங்குதாரர்கள் மகிழ்ச்சி!!

டாலருக்கு நிகராக இந்திய நாணய ரூபாய் மதிப்பு, திடீரென உயர்ந்து வரும் நிலையில், இன்று ஆசிய நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்ந்து 82.32 ஆக நிலை பெற்றுள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்வு:

சர்வதேச சந்தை நிலவரப்படி, சமீப தினங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வந்தது. அமெரிக்க டாலர் கடும் ஏற்றத்தில் இருந்து வந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைந்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் இது வெறும் தற்காலிகமானது என்று தெரிவித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

image.png

இதையடுத்து தீபாவளி விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பங்குச்சந்தை மதிப்புகளில், அமெரிக்க டாலரை வீழ்த்தி இந்திய ரூபாய் மதிப்பு நேற்று திடீரென உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று டாலருக்கு நிகராக ஆசிய நாணயங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் இந்திய ரூபாய் மதிப்பு 82.32 ஆக உயர்ந்துள்ளது.

PhD படிப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்.,,அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

டாலர் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளதால், இனி பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என கருவூலக ஆலோசகர்களின் தலைவர் பன்சாலி தெரிவித்தார். ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் அதிகரித்து 82.29 ஆக இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூபாய் மதிப்பு உயர்ந்து 82.32 ஆக நிலைபெற்றுள்ளது. இந்த அதிரடி உயர்வு பங்குதாரர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here