நாடு முழுவதும் இந்த நாளிலிருந்து வங்கி சேவைகள் கட் – பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு! மக்கள் அதிர்ச்சி!!

0
நாடு முழுவதும் இந்த நாளிலிருந்து வங்கி சேவைகள் கட் - பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு! மக்கள் அதிர்ச்சி!!
நாடு முழுவதும் இந்த நாளிலிருந்து வங்கி சேவைகள் கட் - பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு! மக்கள் அதிர்ச்சி!!

நாடு முழுவதும் வருகிற ஜூன் 27ஆம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

 போராட்டம் அறிவிப்பு :

இந்தியாவில், கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்திற்கு, அரசு ஊழியர்கள் ஆரம்ப காலத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்தப் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாததால், மீண்டும் வருகிற ஜூன் 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பேங்க் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் - பிப். 23, 24 தேதிகளில் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழுவதுமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய திட்டத்தின்படி 10% பிடித்தம் செய்யப்பட்டு 14 சதவிகிதம் பங்கு, அரசால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், ஓய்வூதியத்தின் ஒரு பங்கு பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, அதற்கேற்றபடி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால், தங்கள் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்படும் என பொதுத்துறை ஊழியர்கள் கருதுவதால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here