விஜய் டிவி பிரியங்கா வீட்டில் விஷேஷம்.. பூரிப்பில் மொத்த குடும்பம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

0
கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா - குடும்ப விழாவில் கோலாகலம்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

விஜய் டிவி பிரியங்கா தற்போது தனது அண்ணியின் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவி பிரியங்கா:

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது அசால்ட்டான பேச்சு, காமெடி தன்மை ஆகியவற்றால் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். இதன் பின்பு, பிரியங்காவிற்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இரண்டாவது பரிசை தட்டி சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடனே மீண்டும் பழையபடி விஜய் டிவியுடன் இணைந்துகொண்டார். ஷூட்டில் பிஸியாக இருந்தாலும் கூட அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியபடியே தான் இருந்து வருகிறார்.

தற்போது பிரியங்காவின் தம்பி மனைவியின் வளைகாப்பில் பிரியங்கா கலந்துகொண்டுள்ளார். வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அந்த குழந்தையிடம் ‘ஆண்ட்டி கிட்ட வா மா’ என்று கூறுவது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போது இது மாதிரியான நிகழ்ச்சியெல்லாம் நடக்க போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரியங்கா சென்றதில் இருந்து இவரது கணவருக்கும் இவருக்கும் பிரச்சனை என்று தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here