மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு?? முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதந்தோறும் அவர்களுக்கு ஊக்கத்தொகை அந்தந்த மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலரும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் இந்த பணவீக்கத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2200 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அரசின் அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here