Home செய்திகள் ஆழ்துளைக் கிணறு அனைத்தையும் மூட உத்தரவு., இவ்ளோ தான் டைம்? அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அமைச்சர்!!!

ஆழ்துளைக் கிணறு அனைத்தையும் மூட உத்தரவு., இவ்ளோ தான் டைம்? அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அமைச்சர்!!!

0
ஆழ்துளைக் கிணறு அனைத்தையும் மூட உத்தரவு., இவ்ளோ தான் டைம்? அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அமைச்சர்!!!

நாடு முழுவதும் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு டெல்லியில் குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், அடையாளம் தெரியாத நபர் நேற்று முன்தினம் (மார்ச் 9) விழுந்துவிட்டார். பின்னர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்,,அவரை சடலமாக மீட்டனர்.

கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த டெல்லி …, மீண்டும் தோல்வி பிடியில் சிக்கிய RCB!!

இது அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திய நிலையில், அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளிவந்தது. இந்த தொடர் சம்பவங்களையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மூட வேண்டும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா உத்தரவிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here