கட்டாய வெற்றியை நோக்கி பஞ்சாப் – ராஜஸ்தானுடன் ஐ.பி.எல்.போட்டியில் மோதல்!!

0

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் கட்டாய வெற்றியை நோக்கி பஞ்சாப் களம் காண்கிறது.

ராகுல் பலம்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும், 13வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அபு துபாயில் நடக்கும் 50வது லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. மும்பை மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மற்ற இடத்திற்கு போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் அணிக்கு சத்தம் அடித்துள்ள கேப்டன் லோகேஷ் ராகுல், பூரன், மயங்க் அகர்வால் பலம் சேர்க்கின்றனர். அதிரடி மன்னன் கெய்ல் பங்களிப்பு முக்கியம். ‘வேகத்தில் ‘ பிஷனாய், ஷமி அசத்துகின்றனர். தமிழகத்தின் முருகன் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அணியை கரை சேர்க்க வேண்டும்.

ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்குள் செல்வது மிக கடினம். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சாம்சன், பட்லர் என மின்னல் வேகத்தில் ரன் சேர்க்கும் வீரர்கள் உள்ளனர். ஆர்ச்சர் கை கொடுத்தால் நல்லது.

உத்தேச லெவன் அணி :

பஞ்சாப் – மயங்க் அகர்வால், ராகுல், கெய்ல், பூரன், மேக்ஸ்வெல், மந்தீப் சிங், ஜோர்டான், முருகன் அஸ்வின், ஷமி, பிஷனாய், அர்ஸதீப் சிங்க்.
ராஜஸ்தான் – ஸ்டோக்ஸ், உத்தப்பா, சாம்சன், ஸ்மித், பட்லர், ரியான், திவேதியா, கோபால், ஆர்ச்சர், ஆரோன், தியாகி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here