சற்று முன் வெளியான தகவல் – இந்தியாவில் நேற்று வரை 32.03 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன!!!

0
corona samples
corona samples

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய தகவலின்படி , இந்தியாவில் நேற்று வரை 32,03,01,177 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 20,08,296 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ ஆய்வு  (Indian Council of Medical Research – ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகினுள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து இந்தியாவிற்கு தேவையான மருத்துவ ஆலோசைனைகளை இந்த கவுன்சில் வழங்கி வருகிறது.

கொரோனாவால் உலக நாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்தியாவும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் தொடர்கின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது சமீப நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சற்றே குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாள்தோறும் கொரோனா மாதிரிகள் பரிசோதனை விவரத்தை வெளியிடும். இன்று வந்த தகவலின்படி இந்தியாவில் தற்போது வரை  வரை 32,03,01,177 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here