ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு – இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு..!

0

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் மனுதாக்கல்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான இட ஒதுக்கீடு..!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான 27 % இட ஒதுக்கீடு கடந்த 2017 & 18 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு நீதி வழங்க கோரி நீதிமன்றத்தில் பா.ம.க., அதிமுக,திமுக போன்ற கட்சிகள் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஒடிசாவில் மிதக்கும் சூரிய மின் திட்டம் – NHPC மற்றும் GEDCOL ஒப்பந்தம்!!

இந்திய மருத்துவ கவுன்சில்..!

இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் மனுதாக்கல் செய்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here