ஐசிசி தரவரிசை வெளியீடு: தொடர்ந்து டாப் ஆர்டரில் இடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: தொடர்ந்து டாப் ஆர்டரில் இடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!
ஐசிசி தரவரிசை வெளியீடு: தொடர்ந்து டாப் ஆர்டரில் இடத்தை தக்க வைத்துள்ள இந்திய வீரர்கள்!!

ஐசிசியானது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவ தொடர்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இதில், டி20யின் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பவுலர்களுக்கான தரவரிசையில், அர்ஷ்தீப் சிங் 19 வது இடத்திலும், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா 2வது இடத்தையும் தக்க வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசையில், சுப்மன் கில் 4 வது, விராட் கோலி 9வது மற்றும் ரோஹித் சர்மா 11 வது இடத்தையும், பவுலர்களுக்கான வரிசையில் முகமது சிராஜ் 5 வது இடத்தையும், ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா 11 வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், டெஸ்ட் தொடருக்கான தரவரிசையில், ரோஹித் சர்மா 10வது, ரிஷப் பண்ட் 12 வது மற்றும் விராட் கோலி 14வது இடத்தை பேட்டிங்கிலும், பவுலிங்கில் அஸ்வின் 1வது, ஜடேஜா 3 வது மற்றும் பும்ரா 10 வது இடத்தையும் தக்க வைத்துள்ளனர். மேலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் முதலிரண்டு இடத்தையும், அக்சர் படேல் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆசிய கோப்பை: “அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்த வேண்டாம்”…, அஸ்வின் பகீர் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here