வீடு தேடி வரும் அரசின் சேவைகள்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர்!!

0
வீடு தேடி வரும் அரசின் சேவைகள்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர்!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை  அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக நடைமுறையும் படுத்தி வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் “பகவந்த் மான் சர்க்கார், துஹாதே துவார்” என்ற திட்டத்தை நேற்று (டிசம்பர் 11) பஞ்சாபில் தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த திட்டமானது, பிறப்பு, இறப்பு, வருமானம், வசிப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுதல், ஓய்வூதியம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 43 சேவைகளை மக்கள் எளிதாக பெறுவதற்கு மக்கள் இனி 1076 என்ற ஹெல்ப்லைனை அழைத்து, அவர்களின் வசதிக்கேற்ப வீடு அல்லது அலுவலகத்தில் சேவையைப் பெறலாம். இந்த ஹெல்ப்லைன் மூலம்,  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களின் புகைப்படம் பொருத்தப்பட்ட மஞ்சள் நிற டி-ஷர்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளை வீட்டு வாசலில் டெலிவரி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here